Sunday, January 27, 2013

கருத்தறிதல் 1


அன்பான மாணவர்களே கீழ்க் கண்ட கருத்தறிதல் பகுதியைப் படித்துவிட்டு உங்கள் சொந்த நடையில் பதில் எழுதவும். 


     ஓர் இனம் சிறப்புற்று விளங்க வேண்டுமானால் அவ்வின மக்கள் பேசும் மொழி சீரிய இலக்கியங்களை எடுத்துரைத்தல் வேண்டும். மேலும் எளிய மொழியில் யாவரும் உணரும் வகையில் அவ்வினத்தின்  இறுதி உறுப்­னரிடம் சென்று சேரும் வகையில் நூல்களைப் படைத்தல் வேண்டும். டாக்டர் மு. வ தாம் வாழ்ந்த காலத்தில் அதையே செய்தார். தமிழினம் உணர்வும் உரிமையும் பெற்று உயர வேண்டும் என்றும் ஒன்றாக வாழ வேண்டும் என்றும் அந்த பெருமகனார் எண்ணினார்.
     கற்றறிந்த அறிஞர்களிடம் மட்டுமே ஒடுங்கிக் கிடந்த சங்க இலக்கிய உணர்வும் சிந்தனைகளும் பெரும்பாலான தமிழர்பால் சென்று சேருமாறு பல தமிழ் இலக்கிய நூல்களைப் படைத்தார். அதோடு மட்டுமின்றித் தமிழ்மொழி உணர்வை, தமிழ் இன நலத்தை உருவாக்குவதற்குத் தற்காலத்தில் தோன்றி வளர்ந்த நாவல் கலையை ஆற்றல் வாய்ந்த கருவியென அவர் உணர்ந்தார். அந்தக் கதைக் கலையையே அவர் தம் மக்களின் முன்னேற்றத்திற்கும் நலத்திற்கும் கருவியெனக் கொண்டார் ; அதில் வெற்றியும் பெற்றார்.
     தமிழரிடம் இயல்பாகவே சில குறைகள் உண்டு; காலப்போக்கில் அவை வந்து அவனிடம் அமைந்து விட்டன. தன்னலமிகுதி, இன உணர்வின்மை, புகழ்ச்சிக்கு மயங்குதல், முதலியன அவர்களிடம் அமைந்துவிட்ட குறைகளாகும். தன்னலம் என்பது குறுகிய மனப்பான்மை கொண்டது. இதனைப் பாரதிதாசன் "கடுகு உள்ளம்" என்பார். இவ்வுலகில் தோன்றிய மனிதன் சிறிதளவாவது தன்னலங்கொண்டே இருக்கிறான். அவனுடைய அடிப்படை தேவைகள் நிறைவு பெற்ற ­றகே அவன் பொது நலவாதியாக மாறுகிறான்.
     இன உணர்வு மட்டுமின்றி மொழி உணர்வும் தமிழர்களிடம் தாழ்ந்து போனதற்குப் பல காரணங்களைத் தன் நூல்களில் மு.வ குறித்துள்ளார். இதே கருத்தைத்தான் முனைவர் க.ப அரவாணன் அவர்களும் கூறுகிறார். அதை நீக்கிவிட்டு அவர்களால் வாழவும் இயலாது போல் உள்ளது. சுமைகளைச் சுமந்தே பழக்கப்பட்டுப் போன ஒட்டகத்திற்குச் சிறு சுமையை அகற்றினாலும் பயணம் போகாது; அது போலவே தமிழர்களும் மொழிச்சுமையை இழக்க ஆயத்தமாக இல்லை. 
     பேராசிரியர் மு. வ படைத்துள்ள நாவல்கள் எல்லாம் சமூகப் புதினங்களாகவே உள்ளன. அறிவியல் வளர்ச்சிக்கும் இயந்திர தொழில்நுட்ப நாகரிகத்திற்கும் ஏற்ப பழமை பற்றுமிக்கதாக உள்ள, தமிழ்ச் சமுதாயத்தின் மனப்போக்கை மாற்ற வேண்டும் என்பது அவருடைய முதன்மையான நோக்கம். அவர் மக்களுக்காக பொதுவாக  எழுதினாலும் அவர் தமிழ் இளைஞர்கள் வாழவும் வளரவும் அவர்களின் சிந்தனை ஆற்றலையும் கற்பனையையும் வளர்க்கவே சிறப்பாக எழுதினார் எனலாம்.            

வினாக்கள்                               (20 மதிப்பெண்கள்) 

1. டாக்டர் மு.வ தமிழின்  உயர்வுக்கு என்ன செய்தார்?
 





 








2 . மு.வ எதில் வெற்றிபெற்றார்? அதை எதற்காகப் பயன்படுத்தினார்?
      





 






3 . தமிழரிடம் அமைந்துவிட்ட குணவியல்பு யாது?
      





 






4 . ஒட்டகத்தின் குணவியல்பு எதற்கு ஒப்­பிடப்பட்டுள்ளது?
 





 





 
5 . மு. வ தன் நாவல்களை எதற்காக எழுதினார் ?
 





 



  சொற்பொருள்  ( 5 மதிப்பெண்கள்)
  1. படைத்தார்    _______________________________
  2. தாழ்ந்து     _______________________________
  3. சுமை            _______________________________
  4. ஆயத்தமாக    _______________________________
  5. மனப்போக்கு  ________________________________
  

No comments:

Post a Comment